இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், ரிஷப் பந்த்தும் களமிறங்கினார். முதல் ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வழக்கமான அதிரடியோடு ஆட்டத்தை தொடங்கினார் கேப்டன் ரோஹித்.
முதல் 6ஓவரில் நல்ல ரன் ரேட் வைத்திருந்த இந்திய அணிக்கு பவர் பிளே முடிந்து ஏழாவது ஓவர் முதல் அதிர்ச்சி காத்திருந்தது. 7 ஓவரை வீசிய ரிச்சர்ட் க்ளீசன் முதல் பந்தில் விராட் கோலி (1), இரண்டாவது பந்தில் ரிஷப் பந்த் (26) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து நான்கு பந்துகளையும் டாட் பாலாக வீசினார். தனது முதல் ஓவரில் ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய ரிச்சர்ட் க்ளீசன் ரெண்டு ஓவர்கள் பந்து வீசி 6 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட் வீழ்த்தினார்.