Categories
உலக செய்திகள்

“உருமாறிய கொரோனா வைரஸ்” வெளிநாட்டு பயணிகள் 4 பேருக்கு சோதனை…. வெளியான தகவல்….!!

வெளிநாட்டு பயணிகள் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

உலகை அச்சுறுத்தி வருகிற உருமாறிய கொரோனா வைரசில் ஒமிக்ரான் அதிக ஆபத்துள்ளது என அறியப்படுகிறது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு பரவிவிட்டது. இதனிடையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் குறைவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவில் இந்த உருமாறிய வைரஸ் பரவ தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று ஜெர்மனியிலும், இங்கிலாந்து மற்றும் இத்தாலியிலும் ஒமிக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது. இந்த நிலையில் மாறுபட்ட கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் குறித்த கவலைகளுக்கு மத்தியில் மதுராவிற்கு வந்திருந்த 2 பெண்கள் உட்பட 4 வெளிநாட்டு பயணிகளுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது 4 பேருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனிடையில் அவர்கள் 4 பேரும் சுற்றி வந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு சோதனை நடத்தப்படும் என சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் லித்துவேனியா நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு முதல் முறையாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைதவிர ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாவாசிகளுக்கும், ஆஸ்தி`ரியா பெண்ணுக்கும் என மொத்தம் 4 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |