சீன நாட்டில் அதிக அளவில் பரவிவரும் பிஎப்.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரையிலும் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பிஎப்.7 நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎப்7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய பிற நாடுகளிலும் பரவி வருகிறது.
இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசி இன்று முதல் coWIN செயலி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். பிஎப்.7 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று காரணமாக மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த ஒன்றிய அரசானது ஒப்புதல் அளித்துள்ளது.