ராஜகணபதி கோவிலில் உண்டியலில் இருந்த காணிக்கை பணம் எண்ணப்பட்டது.
சேலம் மாவட்டம் டவுனில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் இருக்கின்றது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 4 உண்டியல்களில் இருந்த காணிக்கை பணம் சுகவனேசுவரர் கோவிலில் வைத்து எண்ணப்பட்டது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளர் உமாதேவி, சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையாளர் குமரேசன், ஆய்வாளர் மணிமாலா மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள், பெண்கள் போன்றோர் பணம், காசு போன்றவற்றை தனித்தனியாக எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அந்த 4 உண்டியல்களிலும் மொத்தம் 23 லட்சத்து 99 ஆயிரத்து 35 ரூபாயும், 6 கிராம் 500 மில்லி தங்கமும், 680 கிராம் வெள்ளியும் இருந்தது. மேலும் கத்தார் நாட்டைச் சார்ந்த ரியால் நோட்டும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டதில் 10 லட்சம் ரூபாய் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.