Categories
உலக செய்திகள்

டொமினிக் ராப் பதவி மாற்றம்…. வெளியுறவுத்துறை செயலாளராக எலிசபெத்…. அமைச்சரவையில் அதிரடி நடவடிக்கைகள்….!!

வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த டொமினிக் ராப் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த சமயம் பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த டொமினிக் ராப் விடுமுறையில் இருந்துள்ளார். இதனால் அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. மேலும் அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்புகள் வலுத்தது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று மாலை பிரதமர் போரிஸ் ஜான்சன் அவரது அமைச்சரவையில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதனையடுத்து பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த டொமினிக் ராப் அந்த பதிவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக Elizabeth Truss என்பவர் வெளியுறவுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக Elizabeth Truss காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு துறைகளுக்கான செயலாளராகவும் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து சர்வதேச வர்த்தக செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டொமினிக் ராப்பிற்கு நிதித்துறை செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தொடர்ந்து துணை பிரதமர் பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |