Categories
மாநில செய்திகள்

வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா..? அப்போ இங்க போய் விண்ணப்பம் செய்யுங்கள்..!!

வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் அட்டையில் முகவரி, பெயர் ஆகியவற்றை திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மாவட்ட வாரியாக சிறப்பு முகாம்கள் அமைத்து வாக்காளர் அட்டையை சரிபார்க்கப்பட்டு தேவையான திருத்தங்களை செய்து தருகிறது.

அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றும், நாளையும் காலை 9.30 மணி முதல் 5 மணி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. பட்டியலில் இடம், பெயர், இடம் பெறாதவர்கள், திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்க விரும்புவோர் மற்றும் ஒரு தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் முகவரியை மாற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் www.nvsp.inஎன்றஇணையதளம் மூலமாகவும், voter Helpline என்ற அலைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |