Categories
சினிமா தமிழ் சினிமா

ஓட்டு ரியோவுக்கு… வாழ்த்து ஆரிக்கு… நட்சத்திர ஜோடி போட்ட பதிவு…!!!

நட்சத்திர ஜோடியான சஞ்சீவ்- ஆலியா சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார்? என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தெரியவரும் . விஜய் டிவி பிரபலங்கள் பலர் ரியோவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர் . அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் பல விஜய் டிவி பிரபலங்கள் ரியோவுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் ‌.

Alya Manasa: Raja Rani actors Alya Manasa and Sanjeev Karthick get engaged  in an award ceremony; take a look - Times of India

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர ஜோடியான சஞ்சீவ்- ஆலியா மானசா இருவரும் ரியோவுக்கு 50 வாக்குகள் போட்டதாக சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தனர் . இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நீ கலக்கு மாமா’ என பதிவிட்டு ஆரியின் புகைப்படத்தை வைத்துள்ளார் . இதிலிருந்து ஆரி டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என அவர் விரும்புவது போல் தெரிகிறது ‌. ரியோவிற்கு ஓட்டு போட்டுவிட்டு ஆரிக்கு வாழ்த்து தெரிவித்த இந்த நட்சத்திர ஜோடியின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |