Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்ட சபை தேர்தல் : ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு…!!

டெல்லி சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் ‘திரிணாமுல் காங்கிரஸ்’ கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது இந்தமுறை ஆட்சியைப்பிடித்து விடவேண்டும் பா.ஜ.க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இந்தநிலையில், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன், டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.  அதில், ‘ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள், ராஜேந்திர நகர் தொகுதியின் வேட்பாளர் ராகவ் சதாவுக்கு வாக்களியுங்கள். இதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாக்களியுங்கள் மற்றும் டெல்லியில் போட்டியிடும் அனைத்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களியுங்கள்’ எனவும் டெரிக் ஓ பிரையன் டுவிட்டரில் பதிவிட்டுளள்ர்.

Categories

Tech |