தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வர கூடிய இந்த சமயத்தில், வாக்காளர் அடையாள அட்டை சேர்ப்பு, சரிபார்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. அந்த வகையில், சென்னையில் நவம்பர் 21, 22 டிசம்பர் 12, 13ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
மொத்தம் 902 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்களை செய்து கொள்ளலாம். மேலும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் தொடர்பாக www .elections .tn .gov .in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.