Categories
தேசிய செய்திகள்

ரூ.1க்கு ”அத்தியாவசிய பொருள்கள்” – கலக்கிய தொண்டு நிறுவனம் …!!

மேற்குவங்க மாநிலத்தில் 1 ரூபாய்க்கு அத்தியாவசியப் பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கி வருகின்றனர்

நாடு முழுவதும் கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சில மாநிலங்களில் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றனர். அவ்வகையில் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24  பர்கானா மாவட்டத்தில் இருக்கும் போங்கான் நகரில் தற்காலிகமான பஜார் ஒன்றை தொடங்கியுள்ளனர் தன்னார்வலர்கள்.

நுழைவு கட்டணமாக ஒரு ரூபாயை வசூலித்து கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. அதனடிப்படையில் அத்தியாவசிய தேவையான அரிசி, காய்கறி, மளிகை சாமான்கள் தேவைப்படுவோர் ஒரு ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அதோடு பொருட்களை எடுத்துச் செல்ல பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த பஜாரில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடைவெளிவிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொண்டு நிறுவனத்தின் செயலாளர் கூறுகையில். “விளையாட்டு திடல் ஒன்றில் பஜார் வைத்துள்ளோம். வருடம்தோறும் அரசு சார்பாக எங்கள் நிறுவனத்திற்கு நிதி கிடைக்கும். அந்த நிதியை வைத்து மக்களுக்கு உதவும் பொருட்டு சமூக சேவை செய்து வருகிறோம். கொரோனா பரவத் தொடங்கிய பின்னர் தேவை இருக்கும் மக்களுக்கு கிடைத்த நிதியை வைத்து முடிந்தவரை உதவி செய்துள்ளோம்” என்றார்.

Categories

Tech |