உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஸ்டாலினுடன் ஆலோசித்தாக தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் ஆபத்தானது என்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்க கூடியது எனவும்,தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்களின் போராட்டம் புதிய அரசியல் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், திருத்தச்சட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்வது நாட்டுக்கு நல்லது எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.