அமெரிக்க நாட்டில் அமைந்திருக்கும் உலகிலேயே மிகப்பெரிய எரிமலை 38 வருடங்கள் கழித்து வெடித்ததால் 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் மேற்கில் பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் இருக்கும் ஹவாய் தீவில் மவுனா லோவா என்னும் எரிமலை அமைந்திருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய எரிமலையான இதில் சுமார் 38 வருடங்கள் கழித்து வெடிப்பு உண்டானது. அதிகளவில் நெருப்பு குழம்பு உண்டானதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, எரிமலையிலிருந்து நெருப்பு குழம்புகளும் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் எரிமலையின் விளிம்புகளுக்கு உள்ளேயே அவை முடிந்து விட்டன. இதனால் அச்சம் தேவையில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகிறது. அதே நேரத்தில் எரிமலை வெடிப்பு அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும் எனவும் நெருப்பு குழம்பின் ஓட்டமானது விரைவில் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் 2 லட்சம் பேர், எந்த நேரத்திலும் வெளியேற தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.