Categories
உலக செய்திகள்

“அது எப்படி…?” கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை…. குழம்பிப்போன ஆய்வாளர்கள்….!!!

டோங்கா தீவு நாட்டில் கடந்த 15 ஆம் தேதி அன்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள டோங்கா தீவு நாட்டில் கடந்த 15 ஆம் தேதி அன்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால், பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சுனாமி உருவானது. 21-ஆம் நூற்றாண்டிலேயே பயங்கர இயற்கை சீற்றமாக இந்த எரிமலை வெடிப்பு  கருதப்படுகிறது.

இந்த எரிமலை வெடிப்பு கடந்த மாதத்தில் லேசாக தொடங்கி, பிறகு இந்த மாதம் 13 ஆம் தேதியிலிருந்து அதிக வீரியமடைந்து, 15-ஆம் தேதியன்று ஆக்ரோஷமடைந்ததாக  கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

அதேபோன்று சுமார் 8,000 கிலோ மீட்டரை தாண்டி இருக்கும் ஜப்பான் மற்றும் வட அமெரிக்க நாடுகளை தொடும் அளவிற்கு இந்த சுனாமியின் தாக்கம் இருந்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன? என்பது தொடர்பிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |