ஜோதிகாவின் பேச்சுக்கு தான் ஆதரவு தெரிவித்ததாக இணையதளத்தில் பதிவிட்டிருந்தது தவறான செய்தி என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த திரைப்படம் மாஸ்டர். திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வெளிவர இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து படத்தின் வெளியீடு தேதி தள்ளிப் போடப்பட்டுள்ளது. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியது பலரது கவனத்தையும் அவர் பக்கம் ஈர்த்துள்ளது.
சில அரசியல் விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது ஜோதிகாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக சமூக வலைதளத்தில் விஜய் சேதுபதி அறிவித்துள்ளதாக தகவல் வர பின்னர் அது வதந்தி என தெரியவந்துள்ளது. போலியான கணக்கு மூலம் யாரோ பதிவிட பின்னர் விஜய்சேதுபதியை இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Fake ❌ pic.twitter.com/WR5vhXsXg7
— VijaySethupathi (@VijaySethuOffl) April 24, 2020