நாகையில் மீன் வியாபாரியிடமிருந்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்துள்ள சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையை பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார் இவர் மீன்பிடி படகு வாங்குவதற்காக இவரிடம் வேலைப்பார்க்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன், தமிழ் மற்றும் சிவக்குமார் ஆகியோருடன் கடந்த 5-ஆம் தேதியன்று நாகை அடுத்துள்ள நாகூருக்கு சென்றுள்ளார் .அப்போது காரை நாகை பட்டினச்சேரி பகுதியில் நிறுத்திவிட்டு படகு வாங்குவதற்காக தினேஷ் சென்றுள்ளார் .
அப்போது ராமச்சந்திரன் என்பவர் காரில் இருந்த ரூபாய் 1.20 லட்சத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவானார். இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ் நாகூர் போலீசில் புகார் அளித்தார் . இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் தலைமறைவாக இருந்த ராமச்சந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பணம் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.