Categories
தேசிய செய்திகள்

சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள மனிதர்…. அகால மரணமடைந்த விவேக்…. இரங்கல் தெரிவித்தார் மோடி….!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் விவேக் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அவரது நிலை மோசமானதால் அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கழித்தே எதுவும் கூற முடியும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரையுலகினர் உள்ளிட்ட பலர் தொடர்ந்து இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நகைச்சுவை நேரமும் புத்திசாலித்தனமான பேச்சுகளும் மக்களை மகிழ்வித்தது. அவரது வாழ்க்கையிலும் அவரது படங்களிலும் சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அக்கறை பிரகாசித்தது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அபிமானிகளுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் சாந்தி” என பதிவிட்டு இருந்தார்.

Categories

Tech |