நீங்கள் ஒரு விவசாயி எனில், புத்தாண்டுக்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி லோன் தேவைப்படுபவர்கள் வாங்கலாம். PNB-ன் இச்சலுகையை நீங்கள் எளிதாக பயன்படுத்தி விவசாய கடனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக வங்கி பல முறைகளை வழங்கி இருக்கிறது. உங்களது வசதிக்கேற்ப இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கடன் பெறலாம்.
கடன் பெறுவது எப்படி..?
# நீங்கள் விரும்பினால் 56070 என்ற எண்ணிற்கு “லோன்” என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
# இது தவிர்த்து 18001805555 என்ற எண்ணில் மிஸ்டுகால் கொடுத்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
# நீங்கள் விரும்பினால் 18001802222 என்ற எண் வாயிலாக கால் சென்டரை தொடர்பு கொண்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
# மேலும் நெட் பேங்கிங் இணையதளமான netpnb.com என்ற விருப்பத்தையும் வங்கி வழங்கி உள்ளது.
# PNB One வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்