நாடாளுமன்ற விவாதத்தில் விவசாயிகள் போராட்டம்,இந்தியாவின் உள் விகாரம் என இங்கிலாந்து அமைச்சர் கூறியுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இதில் விவசாயிகள் உடனான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலே முடிந்துள்ள நிலையில், ஆசியாவுக்கான இங்கிலாந்து நாட்டு அமைச்சர் நைஜெல், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்திவரும் போராட்டங்களை கண்காணித்து, இந்தியாவிலுள்ள எங்களுடைய நாட்டு தூதர்கள் தகவல் அளிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என ஆடம்ஸ் கூறியது மட்டுமின்றி, இந்திய அரசு மற்றும் வேளாண் அமைப்புகள் இடையேயான பேச்சுவார்த்தை நல்ல பயன் தரும் என்ற நம்பிக்கையில் தான் உள்ளதாகவும், பல தருணங்களில் இந்திய அரசாங்கம் விவசாயிகளை சந்தித்து உள்ள நிலையிலும் அந்த சந்திப்பு வீண் போகாது பயன் தரும் என்ற நம்பிக்கையில் தான் இருப்பதாக கூறினார்.