விவசாயி வீட்டில் 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குருசாமி நகர் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் பெரம்பலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் விஜயகுமார் வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து ஜெயக்குமார் திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 60 பவுன் நகைகள் மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விஜயகுமார் மாங்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.