Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“விவசாய நிலத்துக்கு மதிப்பீட்டு சான்றிதழ்” அதிகாரிகள் உட்பட 3 பேர் செய்த செயல்…. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடவடிக்கை….!!

விவசாய நிலத்துக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக 2 அரசு அதிகாரிகள் மற்றும் ஒரு இடைத்தரகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடக்கரையில் ரத்தினசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக 2 1/2 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இந்த நிலத்திற்கு ரத்தினசாமி மதிப்பீட்டு சான்றிதழ் பெறுவதற்காக நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் மெய்த்தன்மை சான்று பெறுவதற்காக எலத்தூர் கிராம நிர்வாக அதிகாரியான ராம்ஜியை ரத்தினசாமி அணுகியுள்ளார். அப்போது ராம்ஜி சான்றிதழ் கொடுப்பதற்கு ரத்தினசாமியிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை விரும்பாத ரத்தினசாமி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் காவல்துறையினர் ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாயை ரத்தினசாமியிடம் கொடுத்து அதை கிராம நிர்வாக அதிகாரியிடம கொடுக்குமாறு கூறினார்கள்.

அதன்படி ரத்தினசாமி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை ராம்ஜியிடம் கொடுத்தார். அப்போது அந்த பணத்தை அங்கு இருந்த முத்துக்குமார் என்பவரிடம் ராம்ஜி கொடுத்தார். இந்நிலையில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ராம்ஜி மற்றும் முத்துக்குமாரை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ராம்ஜி கூறியதாவது “நம்பியூரின் துணை தாசில்தாரான அந்தியூரை சேர்ந்த அழகேசன் என்பவர்தான் ரத்தினசாமிக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்க கூறினார். இதனால்தான் நான் ரத்தினசாமியிடம் லஞ்சம் கேட்டேன். மேலும் இதற்கு இடைத்தரகராக முத்துக்குமார் செயல்பட்டதாகவும்” ராம்ஜி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் கூறினார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராம்ஜி, முத்துக்குமார், அழகேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Categories

Tech |