Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்குள் புகுந்த யானை…. எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டு…. விவசாயிகளின் கோரிக்கை….!!

பூதப்பாண்டி அருகில் விவசாய தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து வாழை மரம் மற்றும் தென்னை மரங்களை நாசம் செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாடகை மலை அடிவாரத்தில் உடையார் கோணம் பகுதி இருக்கின்றது. அங்கு இருக்கக்கூடிய தோட்டத்தில் வாழைமரம்,  இஞ்சி, புடலங்காய் போன்றவை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தாடகை மலை பகுதியில் இருந்து மூன்று யானைகள் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை மிதித்து நாசம் செய்துள்ளது. இதனால் 100 க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் யானைகள் அங்கு இருக்கக்கூடிய தென்னந்தோப்புக்குள் புகுந்து தென்னை மரங்களை வேரோடு சாய்த்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் அந்த யானைகளை காட்டுக்குள் விரட்டி அடிப்பதற்காக வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனசரக அலுவலர் திலீபன் உத்தரவின்படி, வனக்காவலர்கள் ஜான், மில்டன் போன்றோர் விவசாய தோட்டத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இவ்வாறு வாழை மற்றும் தென்னை மரங்களை இழந்து நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |