Categories
உலக செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… இந்தியாவிற்கு இங்கிலாந்து நாட்டு மந்திரி நம்பிக்கை…!!!

விவசாயிகளின் போராட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இங்கிலாந்து நாட்டு மந்திரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றன. விவசாயிகளுடன் நடந்த  பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியையே ஏற்படுத்தியது .தற்போது இங்கிலாந்து  நாட்டு மந்திரி நைஜெல் ஆடம்ஸ் ஆசியாவுக்கான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்றார். எங்கள்  நாட்டு தூதர்கள் இந்தியாவில் நடக்கும் வேளாண் சீர்திருத்த  சட்டத்திற்கு எதிரான இப்போராட்டத்தை குறித்து கண்காணித்து அவ்வப்போது தகவல்களை எங்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை இந்திய அரசு பல தருணங்களில் சந்தித்ததுண்டு. விவசாயிகளிடம் அரசு நடத்தும் பேச்சுவார்த்தை தொடர்ந்து பயனற்றதாகவே அமைகிறது.விவசாயிகள்  போராட்டம் உள்நாட்டு விவகாரம் தான் ஆனால் வேளாண் அமைப்புகள் மற்றும் இந்திய அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தை அனைத்தும் நல்ல பலன்களை அளிக்கும் எ ன்று ஆடம்ஸ் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |