நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நாகை, திருமருகுர், திட்டச்சேரி, கீழ்வேலூர், பாலையூர் உள்ளிட்ட இடங்களில் சம்பா பயிர் அறுவடை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் தமிழக அரசு இதுவரை நேரடி நெல் கொள்ள்முதல் நிலையங்களை திறக்கவில்லை, என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும், என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கூலி உயர்வு, உரம் மற்றும் இட பொருட்கள் விலை என அனைத்துமே இருமடங்காக அதிகரித்துள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே நெல்லுக்கான கொள்ளமுதல் விலையை அரசு உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் .