Categories
இந்திய சினிமா சினிமா

அடப்பாவமே!…. வீட்டு வாடகை கொடுக்க சென்ற நடிகைக்கு!…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!!!

மராட்டிய மாநிலம் புனே நகரில் சின்ஹாகத் சாலையிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நடிகை தேஜஸ்வினி வாடகைக்கு  தங்கியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகவும் இருக்கிறார். ஒருநாள் தான் வசித்து வந்த வீட்டின் வாடகை கட்டணம் தருவதற்காக அவரது அலுவலகத்திற்கு நடிகை தேஜஸ்வினி தனியாக சென்று உள்ளார்.

கடந்த 2010ம் வருடம் காலக்கட்டத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தின் போது, தேஜஸ்வினியின் நடிப்பில் சில படங்களே வெளிவந்திருந்தது. இதற்கிடையில் வீட்டு உரிமையாளருக்காக காத்திருந்த தேஜஸ்வினியிடம், அவர் நேரடியாகவே பாலியல் உறவுக்கான பேரம் பேசி இருக்கிறார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த தேஜஸ்வினி, மேஜையிலிருந்த தண்ணீர் நிரம்பிய கிளாசை எடுத்து அவரது முகத்தில் வீசியுள்ளார். மேலும் “இது போன்ற செயல்களை செய்வதற்காக நான் நடிப்பு தொழிலுக்கு வரவில்லை. அவ்வாறு இருந்தால் வாடகை குடியிருப்பில் நான் தங்கி இருக்க மாட்டேன்” என தேஜஸ்வினி அவரிடம் கூறிவிட்டு புறப்பட்டார்.

Categories

Tech |