மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சுயம்புலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு லிங்கேஸ்வரி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றது. சுயம்புலிங்கத்துக்கு மதுபழக்கம் இருப்பதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி லிங்கேஸ்வரி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சுயம்புலிங்கம் மனமுடைந்த நிலையில் இரவில் உறங்கச் சென்றுள்ளார்.
இதனையடுத்து காலையில் நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவருடைய தம்பி சதீஷ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது சுயம்புலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு சதீஷ் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுயம்புலிங்கம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.