விபத்தில் ஏற்படுகின்ற உயிர் இழப்புகளை தவிர்க்க போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை செலுத்த வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை செலுத்த வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியதாவது, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்டங்களை இணைக்கும் சாலைகள் அவ்வப்போது அபாயகரமான விபத்துக்கள் மூலம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் பல குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதை போன்ற உயிரிழப்புகளை தவிர்க்க சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும் எனவும், இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிந்து, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும். இந்நிலையில் அதிக வேகத்தில் செல்வதை தவிர்த்து சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்ல வேண்டும் எனவும், கண் கூசும் கூடுதல் முகப்பு விளக்குகளைப் பொருத்த கூடாது என்றும், இரு சக்கர வாகனம், இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் என பிரிக்கப்பட்ட வரிசைகளில் செல்ல வேண்டும். இதனை அடுத்து வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். அதன்பின் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. பின்னர் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் அதிக பயணிகளை ஏற்றக்கூடாது.