பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் 9 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை சுகாதாரத்துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை 10 மற்றும் வைட்டமின் மாத்திரை 10 என மொத்தம் 20 மாத்திரைகள் ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறந்த உடனே வழங்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு 40 லட்சம் மாத்திரைகள் வழங்கப்படுவதற்கான தயாராக வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மாணவர்களுக்கு வகுப்பறையில் வைத்து சத்து மாத்திரைகள் விநியோகிக்கப்பட உள்ளன.