Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் ஹீரோயின் இவர் தான்… படக்குழு அறிவிப்பு…!!!

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு ,பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, நீர்பறவை ,ராட்சசன் ,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் காடன் ,ஜகஜால கில்லாடி ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . மேலும் இவர் ‘எஃப்ஐஆர்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

மோகன் தாஸ் பட போஸ்டர்

இதையடுத்து நடிகர் விஷ்ணு விஷால் ‘மோகன்தாஸ் ‘ படத்தில் நடிக்க உள்ளார். களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இந்த படத்தை இயக்க உள்ளார். விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார் . இந்தப் படம் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து உருவாக உள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது .

Categories

Tech |