Categories
சினிமா தமிழ் சினிமா

காதலியுடன் சுற்றுலா பயணம் செய்த விஷ்ணு விஷால்…. ஊர் திரும்பியவுடன் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

காதலியுடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்த விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு, ஜீவா, குள்ளநரிக் கூட்டம், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது காடன், ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக விஷ்ணு விஷால் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இருந்தார். ஆனால் தற்போது சிறிது ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் அவர் தன் காதலியான ஜுவாலா கட்டாவுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தார். தன் காதலியுடன் மாலத்தீவில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்த விஷ்ணு விஷால் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

காதலியுடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள விஷ்ணு விஷால் | Dinamalar

இந்நிலையில் ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கத்தில் “மோகன்தாஸ்” எனும் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். உண்மை கதையை மையமாக வைத்து இயக்கப்படும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |