நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப் ஐ ஆர் , காடன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதை தொடர்ந்து இவர் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் என்ற படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார் . இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் . மேலும் இந்த படத்தில் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது .
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சாரிக் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ரியாஸ்- உமா ரியாஸ் தம்பதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்த படத்தில் பூர்ணிமா பாக்கியராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.