விஷாலின் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் நடிகர் விஷால் ‘அயோக்யா’ படத்திற்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆக்ஷன்’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து கயிறை பிடித்துக் கொண்டு விஷால் குதிப்பது போல் காட்சி முதல் போஸ்டரிலும், கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கும் காட்சி இரண்டாவது போஸ்டரிலும் காணப்படுகிறது.
‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் தமன்னா விஷாலுக்கு ஜோடியாக இணைகிறார். இவர்களுடன் ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, சாயா சிங், சாரா உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடித்து வருகின்றனர். மேலும் விஷால் இந்த படத்தில் இராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கி பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது . இந்நிலையில் 90 சதவிகித படப்பிடிப்பு பணிகள் முடிந்து நிலையில் தற்போது இந்த படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.