Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

மிக மிக விரைவில்…… பாஜகவில் இணைய போகும் பிரபல தமிழ் நடிகர்….!!

நடிகர் விஷால் பாஜகவில் விரைவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் புகழ்பெற்றவர் நடிகர் விஷால். இவர் சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான துப்பரிவாளன் படத்தின் இரண்டாவது பாகத்தை அவரது உதவி இல்லாமல் தானே இயக்கப் போகிறேன் என்று கூறியது உட்பட பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் தமிழக பாஜகவில் இணைய உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.

அதன்படி, விஷால் பாஜக தலைவர் எல் முருகனை சந்தித்து விரைவில் அவர் முன்னிலையில் கட்சியில் இணைவார் என ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்குடன் நடிகை கங்கானாவை இணைத்து விஷால் கருத்து வெளியிட்டதற்கு கடும் கண்டனம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |