கன்னியாகுமரியில் மனைவியை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தங்காட்டை பகுதியில் ரமேஷ்- உமா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அஜித் என்ற மகனும், காவியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் காவல் நிலையம் அருகில் சொந்தமாக பைகள் தைக்கும் கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் மனைவி உமா மீது சந்தேகப்பட்டு கோபத்தில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து வெள்ளிமலை பகுதியில் தலைமறைவாக இருந்த ரமேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதன்பின் காவல்துறையினர் உமாவை கொலை செய்ததன் நோக்கம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ரமேஷ் கூறும்போது,”என் மனைவி உமா என்னை மதிக்காமல் சரியாக பேசவில்லை என்றும் உறவுக்கார ஆண்களிடம் அவர் சிரித்து பேசி வந்ததால் எனக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்”. இந்த காரணத்தினால்தான் உமாவை கொலை செய்தேன் என்று ரமேஷ் காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ரமேஷை குழித்துறை சிறைச்சாலையில் அடைத்தனர்.