பிறந்தநாள் கொண்டாடுவதற்காக இருந்தவர்களை ஆந்திர காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்த சம்பவம் பரபரப்புஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை அருகில் ஒரு தனியார் மண்டபம் ஒன்று இருக்கின்றது. அங்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஏற்பாடு செய்து இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மாலை வேளையில் ஆந்திர மாநில காவல்துறையினர் அங்கு சென்று பிறந்தநாள் கொண்டாட இருந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் சில பேரை வழக்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.