Categories
உலக செய்திகள்

“எங்களுக்கு உயிர் வேண்டாம்”, சாப்பாடு தான் முக்கியம்…. ஊரடங்கை மீறி ஒன்று கூடிய பொதுமக்கள்…. காவல்துறையினருக்கு கிடைத்த வசமான தாக்குதல்….!!

கொரோனா ஊரடங்கை பொருட்படுத்தாமல் முக கவசமின்றியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் தொடர்ந்து 2 ஆவது நாளாக விருந்து உண்பதற்காக பொதுமக்கள் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டு அந்நாட்டு அரசு ஊரடங்கு விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஊரடங்கை பொதுமக்கள் எவரேனும் மீறினால் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரான்சிலிருக்கும் Esplanade des invalids என்னும் பகுதியில் விருந்து உண்பதற்காக தொடர்ந்து 2 ஆவது நாளாக முக கவசமின்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பலநூறு பொதுமக்கள் ஒன்றாக கூடியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் விருந்து உண்பதற்காக கூடியிருந்த பொதுமக்களை கலைந்து செல்லும் படி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் பொதுமக்கள் காவல்துறையினரின் பேச்சை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அவரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |