செல்போனை பார்த்துக்கொண்டே வந்த ஒரு இளைஞர் மேல் தளத்தில் விழுந்து கீழ் தளத்தில் எழுந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துருக்கி நாட்டில் இருக்கும் இஸ்தான்புல் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பணியாளர்கள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்தில் இருக்கக்கூடிய குடோனில் பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்துள்ளனர். எனவே, பொருட்கள் வைக்க சிறிதாக ஒரு அடைப்பு திறந்திருந்தது. அந்த சமயத்தில் 19 வயதுடைய அப்துல்லாஹ் என்ற இளைஞர் செல்போனை பார்த்தவாறு வந்திருக்கிறார்.
This boy in Istanbul was so distracted by his mobile phone he fell through a hole in the floor, only to be saved by a stack of boxes which broke his fall. pic.twitter.com/meunAbGUkk
— TalkTV (@TalkTV) February 17, 2022
எனவே, தரையில் அடைப்பு திறந்த நிலையில் இருந்ததை பார்க்காமல் அதில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் கீழ் தளத்தில் இருந்த பெட்டிகளில் மேல் விழுந்து விட்டார். எனவே எந்த காயமும் இன்றி தப்பினார். தற்போது இணையதளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.