அருப்புக்கோட்டை அருகே கார் விபத்தில் சிக்கிய பெண் பலியான சம்பவத்தில் குற்றவாளியான கார் ஓட்டுநர் கைதாகியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ,சங்கரேசுவரி, குருவலட்சுமி,முருகேசுவரி செல்வி ஆகியோர் விறகு ஏற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் . சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்றபோது அந்த வழியே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இவ்விபத்தில் சிக்கியவர்களை விரைந்து சென்று அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் முன்பே குருவலட்சுமி இறந்து விட்டார். இதையடுத்து பலத்த காயமடைந்த மூவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், காரை ஓட்டிச் சென்ற சரவணனை கைது செய்ப்பட்டுள்ளார்.