பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மோடியை சரமாரியாக சாடியுள்ளார். அதாவது தீபாவளி, விஜயதசமி போன்ற பண்டிகைகளுடன் மோடியின் பெயரை சேர்த்து கொண்டாடுவார்களா ? அப்படி இருக்கும் போது தமிழர்கள் மட்டும் ஏன் ‘மோடி பொங்கல்’ கொண்டாட வேண்டும் ? என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
அதேபோல் மார்கழி மாதத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது காமெடியாக தெரியவில்லையா ? தை மாதத்தில் கொண்டாடப்பட வேண்டிய பண்டிகையை மார்கழி மாதத்தில் நடத்திவிட்டு “மோடி பொங்கல்” என்று கூறுவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.