விருச்சிகம் ராசி அன்பர்களே.! சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
இன்று யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். குடும்ப பெரியவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிப்பார்கள். அதனை நீங்கள் பெரிதுபடுத்த வேண்டாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் வேண்டும். பொறுப்பாக இருந்து எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டும். மனத்துணிவு ஏற்படும். துணிச்சலுடன் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
எதையும் செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். மனதில் தெளிவு இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சி பொங்கும். காதல் கைக்கூடி இன்பத்தை கொடுக்கும். காதலின் நிலைபாடுகள் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு தைரியமான நாளாக இருக்கும். மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும். மாணவர்கள் எதிலும் வெற்றி பெற முடியும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் மஞ்சள்