விருச்சிகம் ராசி அன்பர்களே.! குடும்பத்தில் எண்ணற்ற மகிழ்ச்சி ஏற்படும்.
இன்று தொட்ட காரியம் துளிர்விடும் நாளாக இருக்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி நல்ல பலனை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் முன்னேற்றம் காத்திருக்கின்றது. பயணங்கள் திட்டமிட்டபடி அமையும். தங்குதடை எல்லாவற்றையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் எண்ணற்ற மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு ஏற்படும். ஒற்றுமை பலப்படும். அன்பை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்களுடன் சுமுகமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
எல்லாவற்றிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வீர்கள். காதல் வெற்றியை ஏற்படுத்தும். காதலில் ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரக்கூடும். மன தைரியமாக இருக்கலாம். காதல் கண்டிப்பாக கைகூடி விடும். மாணவர்களுக்கு சிறப்பான செயல்கள் மூலம் முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ள முடியும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். சக நண்பர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்