விருச்சிகம் ராசி அன்பர்களே.! சிறப்பாக முடிவெடுக்கக் கூடிய ஆற்றல் இருக்கின்றது.
இன்று பயணத்தால் பலன் கிடைக்கும் நாளாக இருக்கும். தன்னம்பிக்கையோடு உங்களுடைய பணிகள் செய்ய கூடும். பிரபலமானவர்களின் சந்திப்பு கட்டும். தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் நல்ல முடிவை கொடுக்கும். திடீர் கோபம் இருக்கும். மற்றவரிடம் உரையாடும்போது கவனம் வேண்டும். அனுசரித்து செல்வது நல்லது. நண்பரிடம் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நண்பரிடம் பேசும்போது ரகசியத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பிடிவாத குணத்தை விட்டு விட வேண்டும். வின் குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டி இருக்கும். சில நேரங்களில் வீண் பழியை ஏற்றுக் கொள்வதற்கான சூழல் இருக்கும். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். கடிதப் போக்குவரத்து நன்மையை கொடுக்கும். தொலைபேசி வழித் தகவல்கள் நன்மையைத் தரும். இன்று சிறப்பாக முடிவெடுக்கக் கூடிய ஆற்றல் இருக்கின்றது.
பெண்கள் செய்யக்கூடிய அனைத்து காரியங்களிலும் நல்லது நடக்கும். காதலில் உள்ளவர்களின் மனநிலைக் குழப்பம் நிறைந்ததாக இருக்கும். இந்த காதல் நமக்கு தேவைதானா என்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் கண்டிப்பாக காதல் உங்களுக்கு கைகூடும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் மிகச் சிறப்பாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். மாணவர்கள் கல்விக்காக எடுக்கக்கூடிய முயற்சிகளில் கண்டிப்பாக முன்னேற்றம் அடைய கூடும். மேற்கல்விகான முயற்சியில் மென்மேலும் உங்களால் முன்னேறிச் செல்ல முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவன் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்