விருச்சிகம் ராசி அன்பர்களே.! நிலைமையை புரிந்து செலவுகளை திட்டமிட வேண்டும்.
இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு சில தொந்தரவை ஏற்படுத்தி கொடுக்கும். மனதை செம்மைபடுத்திக் கொள்வது நல்லது. மனதை நீங்கள் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். காலையிலேயே சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். சில முன்னேற்றகரமான சூழ்நிலையை உங்களால் ஏற்படுத்திக்கொள்ள முடியும். தொழில் வியாபாரம் அதிகரிக்க நண்பரின் உதவி கிடைக்கும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். செலவுகளை கண்டிப்பாக குறைக்க வேண்டும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த காரியங்கள் நல்ல முறையில் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறைந்து விடும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் உங்களால் செய்ய முடியும். எண்ணியபடி உங்களுடைய காரியங்கள் எல்லாம் நடக்கும். நினைத்ததும் கண்டிப்பாக நடக்கும். பண பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். பணவிஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். நிலைமையை புரிந்து கொண்டு செலவுகளை திட்டமிட வேண்டும்.
சிலருக்கு புதிய தொழில் தொடங்க போட்ட திட்டங்கள் முன்னேற்றத்தைக் கொடுக்கும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம் அவசரப்பட வேண்டாம். வார்த்தைகளில் தெளிவு வேண்டும். குழப்பங்கள் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். பயணங்கள் செல்லும்போது கவனம் வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கொஞ்சம் பிரச்சனையை ஏற்படுத்தும். காதலின் நிலைபாடுகள் கடினமானதாக இருக்கும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். மாணவர்கள் தைரியமாக இருந்து காரியங்களை செய்ய வேண்டும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். அதற்கான சூழ்நிலையை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உற்சாகமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்