விருச்சிகம் ராசி அன்பர்களே.! எல்லாவிதமான மாற்றங்களும் கண்டிப்பாக இருக்கும்.
இன்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற புனிதப் பயணங்களை மேற்கொள்ளாமா என்ற சூழ்நிலை இருக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். இரண்டு நாட்களாக இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகி குழப்பங்கள் நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். புதிய வாடிக்கையாளர்கள் தொழிலுக்காக கிடைக்கக்கூடும். பழைய பாக்கிகள் கண்டிப்பாக வசூலாகும். மனதிற்குள் ஒருவித பய உணர்வு இருக்கும். அதனை மட்டும் நீங்கள் சரிசெய்து கொள்ளவேண்டும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். எதையும் சிறப்பாக செய்யக்கூடிய மனநிலை இருக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் கூட கையில் வந்து சேரும். எல்லாவிதமான மாற்றங்களும் கண்டிப்பாக இருக்கும். மனதை மட்டும் தெம்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சில நேரம் மனக்கவலை இருக்கும்.
அதனால் சரியான முறையில் ஒரு காரியத்தை அணுகி செய்ய வேண்டும். திருமண தடைகள் எல்லாம் விலகிச்செல்லும். காதல் சிறப்பை ஏற்படுத்தும். கண்டிப்பாக காதல் திருமணத்தில் போய் முடியும். சிறு முயற்சி எடுத்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி பொங்கும். மாணவர்கள் எதையும் திறமையாக செய்ய முடியும். புத்துணர்ச்சியுடன் செய்வீர்கள். மாணவர்களுக்கு குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி பொங்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் மஞ்சள்