விருச்சிக ராசி அன்பர்கள், இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் ரொம்ப கவனத்துடன் ஈடு பட வேண்டும். மிக முக்கியமாக கோவில் வழிபாட்டின் மூலம் குதூகலம் காணவேண்டிய நாளாகவே இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும், தாய்வழியில் உதவிகள் கிடைக்கும், வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
இன்று பதவியில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பார்கள், நண்பர்களிடத்தில் மனதேசம் கொஞ்சம் ஏற்பட கூடும், அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். சுபச்செலவுகள் நிகழும், எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புக்குகளுக்கு உண்டான ஏற்பாடுகளை நீங்கள் செய்விர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும்.
மன வருத்ததுடன் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்த பிரச்சினையும் இல்லை, சுமுகமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கான சூழல் இருக்கும்.இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், இருந்தாலும் படித்த பாடத்தை ஒரு முறைக்கு, இரு முறை எழுதிப் பார்ப்பது சிறப்பை கொடுக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்