Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…எதையும் போராடி முடிக்க வேண்டும்…மன தைரியம் கூடும்..!!

விருச்சிக ராசி அன்பர்களே, இன்று எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புதிய முடிவு செய்யலாம் என்று சிந்தனை மேலோங்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது சிறப்பு.

வியாபாரம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், உறவினர்களின் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். நிலம் ,வீடு மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மன தைரியம் ககூடும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உழைப்பு மற்றும் துணிச்சல் கூடும். இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைத்து தான் படிக்க வேண்டியிருக்கும்.

எதிர்பாராத வகையில் சில நண்பர்களை நீங்கள் சந்திக்கக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை

Categories

Tech |