விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று நண்பர்களால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும் நாளாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மகிழக் கூடிய வாய்ப்பு இருக்கும்.புதிய வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த திருமணம் கைகூடும்.
பிரிந்து சென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைய கூடும். ஒரு சிலர் அரசு பணியில் சேர கூடும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். அதற்கான நேரம் வரும் வரை நாம் காத்திருப்போம். அதேபோல் சகோதர ஒற்றுமை பலப்படும். என்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்க வேண்டும்.
இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.