விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று உடன் பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிட்டும் நாள் ஆகியிருக்கும். இதுவரை வராத உறவினர்கள் சிலர் உங்களின் இல்லம் தேடி வரக்கூடும். இன்று அனைத்து விஷயங்களும் மிக சிறப்பாக நடக்கும். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்க முன்வருவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வீண் சச்சரவுகளை மட்டும் நீங்கள் கவனமாக கையாளுங்கள்.
தொழிலதிபர்களுக்கு அரசாங்கத்தால் சில நெருக்கடிகள் ஏற்படும். சில கேள்விகளை நீங்கள் சந்திக்க கூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து அதற்கு ஏற்றார்போல் நடந்து கொள்வார்கள். காதலர்களுக்கு இனிமையான நாளாக இருந்தாலும் எப்போதும் போலவே வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.
இன்று கல்யாண முயற்சிகள் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களும் ஓரளவு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.