Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவிலேயே இவர் தான் முதல்ல…. மொத்தம் 100 மில்லியன் பாலோயர்கள்…. கிரிக்கெட் கிங் நிகழ்த்திய புதிய சாதனை…!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 100 மில்லியன் பாலோயர்களை கொண்ட ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் மற்றும் ரன் மெஷின் என புகழப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி   எந்த  கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர். இந்நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை நூறு மில்லியனை கடந்துள்ளது.

அதாவது இந்தியாவின் அதிகபடியான 100 மில்லியன் பாலோயர்களை கொண்ட ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அதேபோல் உலக அளவிலும் 100 மில்லியன் பாலோயர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.  இந்தியாவில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் 60 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |