Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரஷரை சமாளிக்க முடியல…. இந்திய அணியிடம் மன உறுதி இல்லை…. கவுதம் கம்பீர் அட்வைஸ் …!!

இந்திய அணி வீரர்களிடம் மன உறுதி இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்

இந்திய அணி சமீபத்திய ஐசிசி போட்டிகளில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வி அடைந்து வெளியேறும் நிலை ஏற்பட்டு வந்தது. இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இதற்கு விமர்சனம் தெரிவிக்கும் விதமாக  கருத்து வெளியிட்டுள்ளார். அதில் “மிகச்சிறந்த வீரருக்கும் நல்ல வீரருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை முக்கியமான போட்டிகளில் தெரிந்துகொள்ள முடியும். மற்ற அணிகள் பிரஷரை சமாளிக்கும் அளவு இந்திய அணி பிரஷர் நிறைந்த சூழலை சமாளிப்பது இல்லை என்று நினைக்கிறேன்.

இந்திய அணி பங்கேற்ற அனைத்து இறுதிப்போட்டி, அரையிறுதிப் போட்டியை பார்க்கும் போது அவர்களின் மன உறுதி மற்றும் நம்பிக்கை மீது சந்தேகம் எழுகின்றது. நாம் உலக சாம்பியன் ஆகும் அளவு வீரர்களை தயார் படுத்துகின்றோம். ஆனால் உலகச் சாம்பியன் பட்டத்தை வெற்றி பெற்றால் மட்டுமே உலகச் சாம்பியன் என கூறுவார்கள். லீக் போட்டிகளில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் நாக் அவுட் போட்டிகளில் தவறு செய்தால் தொடரிலிருந்து வெளியேற வேண்டியதுதான்” எனக் கூறினார்.

Categories

Tech |