Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விராட் கோலி அவ்ளோ பெரிய பிளேயரா”…? ‘அவர விட இவர்தான் பெஸ்ட் பிளேயர்…! சர்ச்சையை கிளப்பிய மைக்கேல் வாகன்…!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்,  இந்திய கிரிக்கெட் அணி மற்றும் வீரர்களை குறித்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.

இவர் இந்திய அணி வீரர்கள் மற்றும் அணியை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்துள்ளார். தற்போது இவர் நியூசிலாந்து அணி வீரரும், கேப்டனுமான கேன் வில்லியம்சனுடன்,  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை  ஒப்பிட்டு பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதுபற்றி கூறும்போது ஒருவேளை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தியாவில் பிறந்திருந்தால் அவரை நிச்சயமாக உலகில் நம்பர் 1  வீரராக இருந்திருப்பார். அதற்காக இந்திய கேப்டன் விராட் கோலி சிறந்த வீரர்களை என்று கூறிவிட முடியாது என்றும் அப்படி கூறிவிட்டால், சமூக வலைத்தளங்களில் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பும் என்று அவர் கூறியுள்ளார்.

என்னுடைய கருத்தின்படி அனைத்து வடிவிலான போட்டியிலும், கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி வருவதாகவும் ,அவர் அமைதியான முறையில் அணியை சிறப்பாக பணிவுடன் வழிநடத்தி வருவதாகவும் கூறினார். இந்த குணத்தினால்  அவர் உயர்ந்து காணப்படுகிறார். ஆனால் சமீபகாலமாக விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சற்று தடுமாறி வருகிறார் என்றும், ஆனால் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். இவர் விராட் கோலியை போல் இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருப்பதாலும், 30 முதல் 40 மில்லியன் டாலர்கள் வரை சம்பாதிப்பதும்  இல்லை. அவர் போட்டியின் போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் ,இனிவரும் போட்டிகளில் விராட் கோலியை விட, கேன் வில்லியம்சன் அதிக ரன்களை குவிப்பார் என்று கருதுவதாக கூறியுள்ளார் .

Categories

Tech |